"தமிழ்ப் பேரரசுக் கட்சி " தொடங்கினார் கவுதமன்!

திரைப்பட இயக்குனரும் தமிழின உணர்வாளருமான கவுதமன்  புதிதாக அரசியல் கட்சி தொடங்கியுள்ளார் , தமிழ் பேரரசுக் கட்சி என்ற பேரில் தொடங்கியுள்ளார் ,

கட்சி துவங்க வேண்டிய அவசியமும் அவசரமும் தற்போது ஏன்  எனறு வினவியபோது,

 ``என்னுடைய கருத்தைக் கொண்ட சிலர் அரசியலில் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் செயலில் இறங்கத் தயங்குகிறார்கள். இனியும் யாரையும் நம்பிக்கொண்டிருக்க நாங்கள் தயாராக இல்லை. ஆகவே, நம் மக்களுக்கான அரசியலைப் பேச நாங்களே கட்சித் தொடங்குவதென தீர்மானித்து விட்டோம்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஆதரித்தார். பிற மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை ஊக்கப்படுத்தினார்.

ஐம்பதாயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்ட தமிழ் மொழியும், தமிழர்களின் கலாசாரமும் வேகமாக அழிக்கப்பட்டு வருகிறது. இனியும் அழிவு ஏற்படாமல் அரணாக நிற்போம். இதுவரை இழந்ததை மீட்போம். நான் கட்சி ஆரம்பிக்கிறேன் எனச் சொன்னதும் மாற்றுக் கட்சியில் இருப்பவர்கள் கூட 'எந்த உதவியானாலும் கேளுங்கள். செய்கிறோம்' எனச் சொல்லி இருக்கிறார்கள். எங்கள் கட்சியின் உதயம் ஒரு மிகப்பெரிய ஜனநாயக யுத்தத்தின் துவக்கமாக இருக்கப் போகிறது என்பதைப் போகப் போக எல்லோரும் உணர்வார்கள்" என்றார். 

ஈழ ஆதரவு, தமிழக  விவசாய நிலங்களை சுரண்டுவதற்காக போடப்பட்ட அனைத்து திட்டங்களுக்கும் எதிராக போராடிய விவசாயிகளுக்கு களத்தில் சென்று ஆதரவு தெரிவித்தார்.

தமிழ் இன உணர்வு, தமிழர் நிலம் உரிமை என தொடர்ந்து தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக செயல்பட்டு வந்த கவுதமன், தனது பொதுவாழ்க்கையை அரசியல் கட்சி மூலம் விஸ்திகரிப்பு செய்ய உள்ளதாக கடந்த நவம்பர் 11-ஆம் தேதி அறிவித்தார்.

இந்த நிலையில் இன்றைய தினம் தமிழ்ப் பேரரசு என்ற கட்சியை சென்னை விருகம்பாக்கத்தில் அவர் தொடங்கி வைத்தார். கட்சிக் கொடியையும் அவர் வெளியிட்டார்.

No comments