பயங்கரவாதத் தடைச்சட்டதிற்கு எதிர்ப்பு! மட்டக்களப்பில் போராட்டம்!


பயங்கரவாதத் தடைச்சட்டம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களை எதிர்ப்போம் என்ற தொனிப்பொருளில் இன்று மட்டக்களப்பில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.1978 ஆம் ஆண்டில் சிறீலங்கா அரசாங்கத்தினால் எழுத்து மூலமாக செயல் வடிவிற்கு வந்து பிறப்பிக்கப்பட்ட பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் மூலமாக யுத்த காலங்களில் வட கிழக்கு பகுதிகளில் மட்டும் அல்லாது தென்பகுதியிலும் இச்சட்டத்தின் மூலமாக பல இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

நடைபெற்றுவந்த 30 வருட கால யுத்தத்தின் இறுதி கால பகுதிகளிலும் நூற்றுக்கு மேற்பட்ட இளைஞர்கள் யுவதிகள் இச்சட்டத்தின் மூலமாக அரசியல் கைதிகளாகவும் முன்னாள் போராளிகளாகவும் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இச் சட்டத்தை மாற்றும் வழியில் தற்போதைய அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமானது முன்பு பிறப்பிக்கப்பட்டிருந்த சட்டத்திலும் வேறுபட்ட விதிமுறைகளில் மாற்றாக அமைகின்றது. இவ்வாறான சட்டங்களை மாற்றும் வரையில் அதனை எதிர்ப்போம் எனக்கூறி இன்று 22 ஆம் திகதி மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு முன்பாக மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமுகங்களின் இணையம், அரச சார்பற்ற அமைப்புக்களின் ஒன்றியம், பெண்கள் அமைப்புக்கள் மற்றும் சர்வமத ஒன்றியம் என பல்வேறு அமைப்புக்களின் ஏற்பட்டில் இவ்   போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.







No comments