சுமந்திரன் கூட்டமைப்பின் தலைவராகின்றார்:மாவை வெளியே?

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் அடுத்த தலைவராக எம்.ஏ.சுமந்திரனை நியமிக்க இணங்கப்பட்டிருக்கிறது. 

சம்பந்தனின் பின்னரான கூட்டமைப்பின் தலைமை தொடர்பில் மாவை சேனாதிராசா கனவு கண்டுகொண்டிருக்க சத்தமின்றி அவரது ஆதரவாளர்களை தன்பக்கம் இழுத்து சுமந்திரன் வெற்றி பெற்றுள்ளார்.
இதன் மூலம் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் அடுத்த தலைவர் போட்டியில் எம்.ஏ.சுமந்திரன் முன்னிலைக்கு வந்துள்ளார்.
இதனிடையே மாவைக்காக குரல் கொடுத்துவரும் ஈ.சரவணபவன் சரவணபவன் கூட்டமைப்பின்  கீழ்மட்ட உறுப்பினரேயென சுமந்திரன் சூசகமாக அறிவித்துள்ளார்.

கூட்டமைப்பின் அடுத்த தலைமைத்துவம் குறித்து கூட்டமைப்பு உயர்மட்ட கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என சரவணபவன்  தெரிவித்ததாக தென்னிலங்கை ஊடகங்களில் வெளியான செய்தி குறித்து யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகும் காலைக்கதிர் பத்திரிகை கூட்டமைப்பு பேச்சாளர் சுமந்திரனிடம் கேள்வி எழுப்பியிருந்தது.

இதன் போதே அவர் கூட்டமைப்பின் முக்கிய உறுப்பினர்களுக்கான உயர்மட்ட குழுவில் சரவணபவன் அங்கத்தவரே இல்லை, பிறகெப்படி உயர்மட்ட குழுவில் கதைத்தது பற்றி அவருக்கு தெரியும்  என ஏகத்தாளமான பதிலை அளித்திருந்ததாக  காலைக்கதிர் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே  சரவணபவன் மற்றும் சுமந்திரனுக்கிடையிலான பனிப்போர் உச்சம்பெற்றிருக்கின்றது.தனக்கெதிராக ஈபிடிபி தொடுத்த மானநஷ்ட வழக்கில் சரவணபவன் தரப்பில் வாதாடுவதாக சுமந்திரன் ஆஜரான போதும் வழக்கு தோல்வியுற்றிருந்தது.

டக்ளசை வெல்லவைத்து சரவணபவன் மில்லியன் கணக்கில் மான நஷ்ட தொகையை டக்ளசுக்கு செலுத்த வைத்தது சுமந்திரனேயென சரவணபனின் ஆதரவாளர்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துவருவது தெரிந்ததே.

No comments