கொழும்பு வருகிறார் சமந்தா பவர்

ஐ.நாவுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் சமந்தா பவர் அடுத்தவாரம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

அரசியல் வாழ்வில், 30 ஆண்டுகளை நிதி அமைச்சர் மங்கள சமரவீரநிறைவு செய்வதை முன்னிட்டு கொழும்பில் நடைபெறவுள்ள நிகழ்வில் பங்கேற்கவே சமந்தா பவர் சிறிலங்கா வரவுள்ளார்.

இந்த நிகழ்வு கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் எதிர்வரும் 28ஆம் நாள் பிற்பகல் 3 மணியவில் நடைபெறவுள்ளது. இதில் சமந்தா பவர் பங்கேற்கு உரையாற்றவுள்ளார்.

இராஜதந்திரியும், கல்வியாளரும், மனித உரிமைகள் சட்டவாளருமான, சமந்தா பவர், பராக் ஒபாமாவின் அரசாங்கத்தில், முக்கிய பதவிகளை வகித்திருந்தார்.

No comments