மாநகரசபையின் எச்சரிக்கையை மீற மலக்கழிவு விடும் நாகவிகாரை கும்பல்

யாழ்.ஆாியகுளம் நாக விகாரைக்கு சொந்தமான யாத்திாிகா் விடுதியின் மலக்கழிவுகள் அருகில் உள்ள வெள்ள வாய்க்காலுக்குள் தொடா்ந்தும் விடப்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ள மக்கள், அந்த வீதியால் செல்ல முடியாத அளவுக்கு துா்நாற்றம் வீசுவதாக கூறுகின்றனா்.

இந்த யாத்­தி­ரி­கர்­கள் தங்­கு­மி­டத்­தில் ஒரே­யொரு சிறிய மல­ச­ல­கூ­டம் மட்­டுமே உள்­ளது. இந்த மல­சல கூடத்தை தின­மும் நூற்­றுக் கணக்­கா­னோர் பயன்­ப­டுத்­து­கின்­ற­னர். அந்த மலக் கழி­வு­ கள் நேர­டி­யாக வெள்ள வாய்­கா­லில் விடப்­ப­டு ­கின்­றன.

இது தொடர்­பா­கப் பல­முறை கூறி­யும் நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வில்லை என்று பொது­மக்­கள் கூறு­கின்­ற­னர். இது தொடர்­பில் கவ­னம் செலுத்துமாறு மாந­கர சபை­யி­டம் தெரி­விக்­கப்­பட்­டது. வாய்­க்காலை மாந­கர சபை ஊழி­யர்­கள் பெரும் சிர­மத்­தின் மத்­தி­யில் சீர் செய்­த­னர்.

ஆனா­லும் தொடர்ந்­தும் மலக்­க­ழிவு நேர­டி­யாக வாய்க்­கா­லுக்­குள் விடப்­ப­டு­கின்­றது என்று மக்­ கள் கூறு­கின்­ற­னர். இது தொடர்­பில் விகா­ரா­தி­ப­தி­யு­டன் மாந­கர சபை உறுப்­பி­னர்­கள் தொடர்­ பு­கொண்டு கேட்­ட­போது,

இந்­தக் கழி­வு­கள் கிடங்கு நிறைந்து மேல­தி­க­மா­கவே வெளி­யே­று­கின்­ றன. தமக்­கென ஓர் தனி­ யான கழிவு அகற்­றும் வாக­னம் இருந்த நிலை­யில் அந்த வாக­னம் தற்­போது பழு­த­டைந்­துள்­ ளது. அத­னால் இரா­ணு­வத்­தி­ன­ரின் உத­வி­யு­டன் கழி­வு­களை அகற்றி வந்­தோம்.

தற்­போது சில நாள்­க­ளாக அந்­தச் சேவை­யும் இடம்­பெ­ற­வில்லை என்று தெரி­வித்­தார் என்று சபை உறுப்­பி­னர்­கள் தெரி­வித்­த­னர். ஆனால் மலக் கழி­வு­கள் வாய்க்­கா­லுக்­குள் விடப்­பட்­டமை தற்­செ­ய­லா­னது அல்ல. இது பல நாள்­க­ளாக நடை­பெ­று­கின்­றது என்று மக்­கள் கூறு­கின்­ற­னர்.

இது தொடர்­பில் மாந­க­ர­ச­பை­யின் சுகா­தா­ரக் குழு­வைச் சேர்ந்த ந.லோக­த­யா­ளன், வ.பார்த்­தீ­ பன் ஆகி­யோ­ரு­டன் வட்­டா­ரப் பிர­தி­நிதி ம.மயூ­ரன், மாந­கர சபை பொறி­யி­லா­ளர்­கள், மேற்­பார்­ வை­யா­ளர்­கள், சுகா­தார அலு­வ­ல­கர்­கள் ஆகி­யோர் நேரில் சென்று

நிலமை தொடர்­பில் ஆராய்ந்து சீர் செய்ய ஏற்­பாடு செய்­த­னர் எனத் தெரி­விக்­கப்­பட்­டது.

No comments