குழப்பம் விளைவித்தது சுமந்திரனின் குண்டர்களே: சிறீதரன்!


கிளிநொச்சியில் செய்தி சேகரித்தலில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர்களை அச்சுறுத்தியும் தடுத்தும் செயற்பட்டவர்கள் தனது ஆதரவாளர்கள் இல்லையென நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மறுதலித்துள்ளார்.

இன்று கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது போராட்டத்தின் போது தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் தேவையென கோசமெழுப்பியதுடன் வன்முறையிலும் சிறீதரனின் என அடையாளப்படுத்தப்பட்ட கும்பல் முற்பட்டிருந்தது.

இதனை அறிக்கையிட முற்பட்ட ஊடகவியலாளர்களை தாக்க முற்பட்ட கும்பல் கிளிநொச்சியினை தாண்டி செல்லமாட்டீர்களெனவும் அச்சுறுத்தியுள்ளனர்.

அக்கும்பலால் யாழ்ப்பாணம் மற்றும் முல்லைதீவு ,கிளிநொச்சி ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்பட்டிருந்தனர். 

இதனிடையே வழமையாக மக்களது போராட்டங்களுக்கு மதிப்புக்கொடுக்காமல் அதனை கணக்கெடுக்காத கூட்டமைப்பு இன்று இடம்பெற்ற காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டத்தில் கலந்து கொண்டு அப்போராட்டத்தை மலினப்படுத்தும் வேலையை மேற்கொண்டதாக யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் குற்றஞ்சுமத்தியுள்ளனர்.எம்.ஏ.சுமந்திரனின் விசிறிகளான கிளி கரைச்சி பிரதேசசபை உறுப்பினர் ஒருவருடன் வருகை தந்த சுமந்திரனின் ஆதரவாளர்கள் குறித்த போராட்டத்தை மலினப்படுத்தும் வேலைகளை இன்று தொடர்ச்சியாக மேற்கொண்டுவந்தார்கள். காணாமல் போனோரை கண்டறியும் பொறிமுறைக்கான இலங்கை அலுவலகத்தில் நம்பிக்கையில்லை என்று காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பதாதைகளை தாங்கிவருகின்ற போது அந்த பதாதைகளை சுமந்திரனின் ஆதரவாளர்கள் கிழித்ததுடன் அது வேண்டும் என்றும் கோசம் எழுப்பி ஒலிபெருக்கியின் வயர்களை அறுத்தும் அறிவிப்புப்பணியைச்செய்தவர்களைத்தாக்கியும் காணொளி எடுக்க முற்பட்ட ஊடகவியலாளர்களைத்தாக்க முற்பட்டும் கேவலமான வேலைகளை திட்டமிட்டு மேற்கொண்டார்கள். மேற்படி குழப்பிய நபர்களில் ஒருவர் மதுபோதையுடனும் காணப்பட்டுள்ளார். 

அண்மையில் சக்தி ரீவி பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுடன் முரண்பட்டுக்கொண்டபோது கிளிநொச்சியில் உள்ள சக்தியின் விளம்பரப்பதாதைகளை அகற்றி அதை முக இணையத்தில் தரவேற்றிய கிளிநொச்சி கரைச்சிப்பிரதேச சபை உறுப்பினரே இன்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டத்தை மலினப்படுத்தும் செயற்பாடுகளை முன்னின்று செயற்படுத்தியவர் என மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.ய

No comments