வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஆளுநருடன் சந்திப்பு


வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், வடமாகாண ஆளுனர் சுரேன் ராகவனைச் சந்தித்து விபரங்கள் கையளித்துள்ளனர்.

வலிந்து காணமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் யாழ்பாணம் சங்கத்தினர் , வடமாகாண ஆளுநரை கடந்த வாரம் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
 இதன் போது ஆளுந‌ர் சுரேன் ராகவன் காணாமல் போனவர்களது முழுமையான விபரத்தினை தன்னிடம் வழங்குமாறு கோரியிருந்ததார்.

அதற்க்கமைய இன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் யாழ் மாவட்ட சங்கத்தின் சார்பில் ஆளுநரைச் சந்தித்து விபரங்களைக் கையளித்துள்ளதாக தலைவி ரி.கமலநாயகி தெரிவித்தார்.

இதேவேளை முழுமையான விபரங்கள் கிடைக்கப் பெறவில்லை என்றும் எனவே கீழ்க்குறித்த முகவரி மற்றும் தொ. பேசி இலக்கத்தில் ஊடக தொடர்பு கொண்டு விபரங்களை வழங்குமாறும் அவர் கோரியுள்ளனர்.

கமலநாயகி துரைசிங்கம்
செயலாளர்
காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம்
இல. 16, கச்சேரி கிழக்கு ஒழுங்கை, யாழ்ப்பாணம்
தொலைபேசி - 021 222 1037
            - 0778155722

No comments