அரச ஊடக குடுமிப்பிடி: ஆராய குழு?


இலங்கை அரச ஊடகங்களை கையாள்வது மைத்திரியா ரணிலாவென்ற சர்ச்சைகளின் மத்தியில்;, அரச ஊடகங்களின் செயற்பாடுகளை ஆராய்வதற்காக அரச நிதி மற்றும் ஊடக அமைச்சர் குழுவொன்றை நியமித்துள்ளார்.

இந்தக் குழுவில் ஏழு பேர் அங்கம் வகிக்கிறார்கள். ஐநாவின் கலாசார அமைப்பான யுனெஸ்கோவின் ஆலோசகராக வேலை செய்த விஜயானந்த ஜயவீர குழுவின் தலைவர் . இதில் பேராசிரியர் ஜயதேவ உயன்கொட, கலாநிதி பிரதீப் வீரசிங்ஹ, பிரபல ஊடகவியலாளர் நாலக குணவர்த்தன, மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கௌசல்யா பெர்னாண்டோ, அனோமா ராஜகருணா, சட்டத்தரணி சுதர்ஷன குணவர்த்தன ஆகியோர் அங்கம் வகிக்கிறார்கள்.

அரச ஊடகங்களில் மைத்திரி-மஹிந்த ஆதரவு தரப்புக்களும் அதே போன்று ரணில் ஆதரவு தரப்புக்களும் அண்மைக்காலமாக முட்டிமோதி வருவது தெரிந்ததே. 

No comments