அறிக்கை வராத போதும் தொடர்கிறது அகழ்வுப் பணிகள்!

மன்னார் மனித புதை குழியில் இன்று 149 ஆவது நாளாக அகழ்வுப் பணிகள் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தலைமையில் இன்று முன்னெடுக்கப்பட்டன.
தொடர்ச்சியாக ஆய்வு முடிவுகள் வெளி வரும் என எதிர் பார்க்கபட்ட போதும், குறித்த பரிசோதனையை நடாத்திய ஆய்வு நிறுவனத்தின் ஊடக நேரடியாக மன்னார் நீதி மன்றுக்கு எந்த முடிவுகளும் அனுப்பிவைக்கபடாத காரணத்தால், சட்ட வைத்திய அதிகாரியினால் சமர்பிக்கப்பட்ட ஆவணமானது இன்னமும் வெளியிடப்படவில்லை.
குறித்த புதைகுழி அகழ்வு பணிகள் தொடர்பாகவும், ஆகழ்வுகளை தொடர்ச்சியாக மேற்கொள்வதா? என்பது தொடர்பாகவும் மன்னார் மனித புதைகுழி அகழ்வுப்பணியின் நிர்வாக கட்டமைப்பு தொடர்பான விடயங்கள் தொடர்பாகவும், மன்னார் நீதி மன்றத்தில் கூட்டம் நேற்று இடம் பெற்றது.
கூட்டத்தில் மன்னார் நீதவான் , சட்ட வைத்திய அதிகாரி ,காணமல் போனோர் அலுவலக பிரதி நிதி ,காணாமல் ஆக்கப்பட்டோர் சார்பாக வாதிடும் சட்டத்தரணிகள் கலந்து கொண்டிருந்தனர் .
அதே நேரத்தில் இன்று வழமை போன்று அகழ்வு பணிகள் இடம்பெற்றன.
இதுவரை குறிப்பிட்ட வளாகத்தில் இருந்து 323 மேற்பட்ட முழு மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அதில் 314 மனித எலும்புக்கூடுகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.

No comments