கேப்பாபுலவு போராட்டம் கொழும்பு செல்கின்றது?


கேப்பாபுலவில் தமது காணிகளை விடுவிக்க போராடும் மக்கள் தமது போராட்டத்தை இலங்கை தலைநகர் கொழும்பிற்கு கொண்டு செல்ல முற்பட்டுள்ளனர்.

அதன் ஓர் அங்கமாக தேசிய உழைக்கும் மீனவர் அமைப்பினர் வடக்கு.கிழக்கு பகுதிகளில்; இலங்கை இராணுவத்தால் சுவீகரிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் காணிகள் விடுவிக்க கோரியே நடமாடும் ஊர்தி போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.

இராணுவத்தால் கைவசப்படுத்தப்பட்டுள்ள காணிகள் விடுவிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையோடு  போராடிவரும் கேப்பாப்புலவு மக்களின் போராட்ட மையத்திலிருந்து இன்று காலை 9.00 மணிக்கு ஆரம்பித்த ஊர்தி பயணம் முல்லைத்தீவு  அரசாங்க அதிபர் செயலகம் சென்று மகஜர் கையளிப்புடன் ஆரம்பமாகியிருந்தது.

அதன்பின்  புதுக்குடியிருப்பு ஊடாக கிளிநொச்சி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் கவனயீர்ப்பு போராட்ட இடத்திற்கு சென்று  அதன் பின் யாழ்ப்பாணம் சென்று ஊர்தி பின்னர் வவுனியா ஊடாக அம்பாறை செல்லவுள்ளது.

இராணுவம் கையகப்படுத்தியுள்ள தமிழ் மக்களின் காணிகளை அடையாளப்படுத்தி பின் கொழும்பில விடுபடாத அனைத்து தமிழ் மக்களின் காணிகளும் விடுவிக்கப்படவேண்டும் என்ற மகஜர் கையளிப்புடன் நடமாடும் ஊர்தி பேரணி முடிவுக்கு வரவுள்ளது.

No comments