முகமாலைக்கு நிதி வேண்டும்?


மனித நேயக்கண்ணி வெடியகற்றலிற்கான நிதி உதவிகளை சர்வதேச தரப்புக்கள் மட்டுப்படுத்தியுள்ள நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தின் முகமாலைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் கண்ணிவெடி அகற்றும் செயற்பாட்டிற்கு நிதி திரட்டும் கவனயீர்ப்பு பயணம் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

போர் முன்னரங்க பகுதியாக இருந்த முகமாலை பகுதியில் இன்று சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட குறித்த பயணம் கிளிநொச்சி நகருக்கு சென்றடைந்து நிறைவுக்கு வந்திருந்தது. 

இந்த பயணத்தில் அப்பகுதியில் கண்ணிவெடியகற்றல் பணியிலீடுபட்டுள்ள ஹலோ ட்ரஸ்ற் நிறுவனத்தின் பணியாளர்கள் கலந்துகொண்டனர். கிளிநொச்சி, முகமாலைப் பகுதியில் யுத்த காலத்தில் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளை அகற்றும் செயற்பாட்டில் தொண்டு நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. இதில் ஹலோ ட்ரஸ்ற் நிறுவனத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்டுவரும் கண்ணிவெடி அகற்றும் செயற்பாட்டிற்கு நிதி சேகரிக்கும் நோக்குடன் குறித்த பயணம் முன்னெடுக்கப்பட்டது.

2025ம் ஆண்டில் கண்ணிவெடிகற்ற நாடு எனும் பிரகடனத்தை மையப்படுத்தி பணிகள் இடம்பெறுகின்ற போதும் இலங்கை அரசு நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்ளாதிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

No comments