இரண்டாம் உலக போரில் முத்தம் அளித்த மாலுமி மெண்டோன்ஷா காலமானார்!

இரண்டாம் உலக போர் வெற்றிக்கு பின்னர் நாடு திரும்பி, வரலாற்று புகழ் முத்தம் அளித்த மாலுமி மெண்டோன்ஷா 95-வயதில் காலமானார்!

1960-களில் உலக புகழ்பெற்ற புகைப்படங்களில் ஒன்று The Kissing Sailor ஜப்பான் நாட்டுக்கு எதிராக போர் புரிந்து வெற்றிப்பெற்று நாடு திரும்பிய கப்பல் படை வீரர், இளம் செவிலியர் ஒருவரை முத்தமிடும் காட்சி. இந்த புகைப்படம் 1945-ல் ஆல்ஃபிரெட் ஐசென்ஸ்டாட் என்பவரால் படம்பிடிக்கப்பட்டது, எனினும் 1960-ஆம் ஆண்டு Life  பத்திரிகையில் பிரசுரித்த பின்னரே உலக புகழ் பெற்றது.

இந்த புகைப்படத்தில் இருக்கும் நபர் யார் பின்னரே அடையாளம் காணப்பட்டது. அதன்படி இப்புகைபடத்தில் இருக்கும் மாலுமி ஜார்ஜ் மெண்டோன்ஷா. 95 வயது நிரம்பிய இவர் தனது 96-வது பிறந்தநாளை எட்ட இரண்டு நாட்கள் மீதம் இருந்த நிலையில் கடந்த பிப்ரவரி 17-ஆம் நாள் வயது முதிர்வு காரணமாக இறந்துள்ளார்.

இந்த செய்தியினை அவரது மகள் செரான் மொளியர் உறுதிப்படுத்தியுள்ளார். இதனையடுத்து ரோடி தீவில் உள்ள மிடில் டவுன் பகுதியில் மெண்டோன்ஷா உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

சரி… அந்த புகைப்படத்தில் இருக்கும் செவிலியர்?…

இப்புகைப்படத்தில் இருக்கும் செவிலியர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே இறந்துவிட்டார். கிரெட்டா ஜிம்மர் ஃப்ரீட்மேன் என அடையாளம் காணப்பட்ட இவர் தனது 92-வது வயதில் 2016-ஆம் ஆண்டு காலமாகியுள்ளார். பின்னர் அர்லிகெட்டன் தேசிய கல்லறை பகுதியில் அடக்கம் செய்யப்பட்ட அவரது கணவர் கல்லறைகு அருகிலேயே கிரெட்டா ஜிம்மர்-ம் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளார்.

No comments