ஆயிரம் ரூபா பேச்சு தோல்வி


பெருந்தோட்டத்தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கமுடியாது என முதலாளிமார் சம்மேளனம் இன்று ( 10) மீண்டும் திட்டவட்டமாக அறிவித்தது.

இதனால், கூட்டுஒப்பந்தம் தொடர்பில் இன்று நடைபெற்ற இரண்டு சுற்றுபேச்சுகளும் தோல்வியில் முடிவடைந்தன.
அதாவது சம்பள உயர்வுக்கு முதலாளிமார் சம்மேளனம் இணக்கம் வெளியிட்டிருந்தாலும், தொழிலாளர்களாலும், தொழிற்சங்கங்களாலும் கோரப்படும் ஆயிரம் ரூபாவை வழங்குவதற்கு மறுப்பு தெரிவித்தது.
அத்துடன், புதியதொரு சம்பள முன்மொழிவு யோசனையையும் முன்வைத்தது.
புதிய நகர்வு
முதல் வருடத்தில் அடிப்படை சம்பளம் – 625 ரூபா.

வருடத்துக்கு ஒருமுறை 25 ரூபா அதிகரிப்பு.

முதல் வருடம் 625 ரூபா
2ம் வருடம் 650 ரூபா
3ம் வருடம் 675 ரூபா

ஊக்குவிப்பு கொடுப்பனவு 140
வரவுக்கான கொடுப்பனவு 80
விலைக்கான கொடுப்பனவு 30

முதல் வருட மொத்த சம்பளம் 625 +140 + 80 + 30 = 875

தொழில் அமைச்சர் தயா கமகே, பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க ஆகியோருக்கும் முதலாளிமார் சம்மேளத்தினருக்கும் இடையில் நடைபெற்ற முதலாவது சந்திப்பிலேயே மேற்படி யோசனை முன்வைக்கப்பட்டது.

பின்னர், தொழில் அமைச்சர், பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ஆகியோர் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கத்தினருடன் பேச்சு நடத்தினர். எனினும், முதலாளிமார் சம்மேளனத்தின் யோசனைக்கு பச்சைக்கொடி காட்டப்படவில்லை.

No comments