குற்றவாளியைத் தப்பவிட்ட பொலிஸிற்கு எதிராக நாளை யாழில் ஆர்ப்பாட்டம்

குற்றவாளியைத் தப்பிக்கவிட்ட பொலிசாரின் அராஜகத்தைக் கண்டித்து நாளை நாவாந்துறையில் ஆர்ப்பாட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டத்திற்கென நாளை காலை 9 மணிக்கு நாவாந்துறை கிராமத்தில் ஒன்றுகூடுமாறு கிராம இளைஞர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

சிறுமைி ஒருவரைக் கடத்திச் செல்ல முற்பட்டதாக நேற்றயதினம் நாவாந்துறையில் ஒருவர் இளைஞர்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டு நையப்பிடைக்கப்பட்டார். அவர் காத்தான் குடியைச் சேர்ந்தவர் என தெரியவந்தது. இந்நிலையில் பொதுமக்களிடமிந்து குறித்த நபரை மீட்டுச் சென்ற பொலிசார் யாழ் போதனா வைத்திசாலையில் அனுமத்துள்ளனர்.

குறித்த நபர் குற்றச் சந்தேக நபராக உள்ளபோதும் பொலிஸ் காவல் ஏதுமின்றி வைத்தியசாலையில் சிகிச்சைக்கு அனுமதித்த நிலையில் குறித்த நபர் அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளார்.

இதனால் கொதிப்படைந்த இளைஞர்கள் பொலிஸின் அராஜகச் செயலுக்கு எதிராக போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

No comments