புளொட்டும் நிராகரிக்கின்றதாம்?

டெலோவினை தொடர்ந்து புளொட் அமைப்பும் தனது புதிய அரசியலமைப்பிற்கான நிபுணர் குழுவை நிராகரிக்கலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.இது தொடர்பில் புளொட் தரப்பிற்கும் அழுத்தங்களை அதனது வெளிநாட்டு கட்டமைப்புக்கள் பிரயோகித்துவருகின்ற போதும் வழமை போல சித்தார்த்தன் மதில் மேல் பூனையாக கள்ள மௌனம் சாதித்துவருகின்றார்.
அடுத்த தேர்தலிற்கான தனது தயாரிப்பில் சித்தார்த்தன் தயாராகிவருவதுடன் வழமை போல இரட்டை வேடத்தை கைப்பிடித்து வருகின்றார்.
இந்நிலையில் “புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான நிபுணர் குழுவின் அறிக்கையை ரெலோ கட்சியினர் நிராகரித்துள்ளமை குறித்து கருத்துக்கூற நான் விரும்பவில்லை. அது அவர்களின் தனிப்பட்ட முடிவு. இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுத் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன்.
‘நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டிருக்கும் அரசியல் தீர்வுத் திட்டம் தொடர்பான நிபுணர் குழுவின் அறிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) அடியோடு நிராகரித்துள்ளது. கூட்டமைப்பின் தலைவர் என்ற ரீதியியில் இது குறித்து தங்கள் நிலைப்பாடு என்ன” என்று இரா.சம்பந்தனிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

No comments