புதிதாக முளைத்த விகாரைக்கு பாதுகாப்பு?


முல்லைத்தீவு – நாயாறு நீராவியடிப் பிள்ளையார்  கோவில் வளாகத்தில் அடாத்தாக அமைக்கப்பட்டுள்ள புத்த விகாரைக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த கோவில் வளாகத்தில், புத்தர்சிலை அமைக்கப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணைகள், முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ்.லெனின்குமார் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, முல்லைதீவு நீராவியடி பிள்ளையார் கோவிலில் அத்துமீறிய புத்தர்சிலை வழக்கு விசாரணை, பெப்ரவரி 12ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டதோடு, அபிவிருத்தி வேலைகளுக்கும் தற்காலிக தடை விதிக்கப்பட்டது.

அத்துடன்,  தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகத்தை மன்றில் ஆஜராகுமாறு பணிப்புரையும் விடப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே, குறித்த பகுதிக்கு விசேட போலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.இலங்கை இராணுவத்தினரது முகாம் அமைந்திருந்த சூழுலில் தற்போது பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமை சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது.

ஏற்கனவே விகாரை பணிகள் பூரணப்படுத்த அவசர அவசரமாக திறந்து வைக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கே பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாவென்ற சந்தேகம் தமிழ் மக்களிடையே எழுந்துள்ளது.

No comments