மார்ச் 05 இல் வரவுசெலவுத்திட்டம் சமர்ப்பிக்க முடிவு

சிறிலங்கா அரசாங்கத்தின் 2019ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் மார்ச் 05ஆம் நாள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

நிதியமைச்சர் மங்கள சமரவீர, இந்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் மார்ச் 05ஆம் நாள் முன்வைக்கவுள்ளார்.

அதற்கு முன்னதாக, வரும் பெப்ரவரி 05ஆம் நாள், நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் வரவுசெலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படவிருந்த நிலையில், ஆட்சிக்கவிழ்ப்பு இடம்பெற்றதால், 2019ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments