அதிகாலை கோர விபத்து ஆறுபேர் பலி

சிலாபம் – வென்னப்புவ, நயினமடம பாலத்திற்கருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று அதிகாலை 3.20 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காரொன்றும் லொறியொன்றும் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. வென்னப்புவ நோக்கிப் பயணித்த லொறி மீது, பின்னால் பயணித்த கார் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்துக்குள்ளான காரில் பயணித்த 6 ஆண்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த நபர்கள் விருந்தொன்றில் கலந்துகொண்டுவிட்டு வீடு திரும்பிய சந்தர்ப்பத்திலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது. வென்னப்புவ பகுதியைச் சேர்ந்தவர்களே விபத்தில் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


No comments