மைத்திரிக்காக காத்திருந்த சிறீதரன்?


இரணைமடுவுக்கு ஜனாதிபதி மைத்திரி விஜயம செய்திருந்த நிலையில் தனது ஆதரவாளர்கள் சகிதம் காத்திருந்து தனது ஆதரவை வெளிப்படுத்திய தமிழரசு நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனின் அரசியல் நகர்வு பாராட்டுக்குள்ளாகியுள்ளது.

கொழும்பு அரசியல் குழப்பங்களின் பின்னராக மைத்திரியுடன் கூட்டமைப்பு தலைமை கோபித்துக்கொண்டுள்ளது.அதன் எதிரொலியாக இன்றைய மைத்திரியின் வருகையினை கூட்டமைப்பு தலைமை கண்டுகொள்ளவில்லை.

ஆனாலும் அதனை பொருட்படுத்தாது தனது பிரதேச சபை தலைவர்களையும் அழைத்துக்கொண்டு வருகை தந்திருந்ததுடன் நீண்ட நேரம் தெருவோரம் காத்திருந்து சி.சிறீதரன் மைத்திரியை வரவேற்றிருந்தார்.

இதேவேளை சிறீதரனின் சிபார்சின் பேரிலேயே அவரது நெருங்கிய ஆதரவாளரும் அண்மையில் சிறீதரன் சார்பில் சமாதான நீதிவான் பதவியை பெற்றுக்கொண்டவருமான  கமக்காரர் அமைப்பு பிரதிநிதி முன்னின்று நிகழ்வை நடத்தியிருந்தமை தெரிந்ததே.

No comments