எதிர்கட்சி தலைவரானார் மஹிந்த:போயே போச்சு?


ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான மஹிந்த ராஜபக்‌ஷ நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக நாடாளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அமைய ஏற்றுக்கொள்ளப்பட்டதாக சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

நாடாளுமன்றத்தில் அதிக ஆசனங்களைக் கொண்டுள்ள கட்சிக்கே எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்படுவதாகவும் சபாநாயகர் தெரிவித்தார்.
அத்துடன் எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளராக மஹிந்த அமரவீர நியமிக்கப்பட்டுள்ளதாகவும் சபாநாயகர் கரு ஜயசூரிய சபையில் அறிவித்தார்.
முன்னைய செய்தி...
இலங்கை ஜனாதிபதிக்கும் சபாநாயகருக்குமிடையே எட்டப்பட்ட ஒப்பந்தப்பிரகாரம் எதிர்கட்சித் தலைவர் மற்றும் எதிர்கட்சி அமைப்பாளர் பதவிகளை சுதந்திரக்கட்சிக்கு  வழங்க சபாநாயகர் தீர்மானித்துள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதேவேளை எதிர்கட்சி தலைவர் பதவியை விட்டுக்கொடுக்கப்போவதில்லையென எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ள போதும் சுமூக நிலையினை ஏற்படுத்த இலங்கை ஜனாதிபதிக்கும் சபாநாயகருக்குமிடையே நடத்தப்பட்ட பேச்சுக்களில் எதிர்கட்சி தலைவர் பதவியும் பேரம் பேசப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

.

No comments