யாழில் சமாதானப் புறா விட்ட போர்க்குற்றவாளி சவேந்திரடிசில்வா

இறு­திக்­கட்­டப் போரின் போது போர்க்­குற்­றங்­களை இழைத்­தார் என்று கடு­மை­யான குற்­றச்­சாட்­டு­கள் முன்­வைக்­கப்­பட்­டுள்ள மேஜர் ஜென­ரல் சவேந்­திர சில்வா யாழ்ப்­பா­ணத்­தில் நேற்று இன நல்­லி­ண­கத்­துக்­காக சமா­தா­னப் புறாபறக்க விட்­டார்.

போரால் மாற்­றுத் திற­னா­ளி­யாக ஆக்­கப்­பட்ட இரா­ணு­வச் சிப்­பாய் ஒரு­வர் சிறப்­புத் தேவை­யு­டை­ய­வர்­க­ளுக்­கான சைக்­கி­ளில் வடக்­குக்­கும், தெற்­குக்­கு­மி­டை­யி­லான ஒற்­று­மையை வலி­யு­றுத்­திய பவனி ஒன்றை மேற்­கொண்­டார். தென்­மு­னை­யில் அரம்­பிக்­கப்­பட்ட அவ­ரின் பவனி 7 நாள்­க­ளாக நடை­பெற்று வட­மு­னை­யான பருத்­தித்­துறை முனை­யில் நேற்று நிறை­வ­டைந்­தது. நிறைவு நிகழ்வு பருத்­தித்றை முனை­யில் இடம்­பெற்­றது.

அதில் மேஜர் ஜென­ரல் சவேந்­திர சில்­வா­வும் நிகழ்­வில் கலந்து கொண்­டார். நிகழ்­வில் சமா­னத்­தை­யும், ஒற்­று­மை­யை­யும் வலி­யு­றுத்­திய மேஜர் ஜென­ரல் சவேந்­திர சில்வா சமா­தா­னத்தை வேண்டி சமா­தா­னப் புறா­வைப் பறக்க விட்­டார். இந்த நிகழ்­வில் யாழ்ப்­பாண மாவட்ட இரா­ணு­வக் கட்­ட­ளைத் தள­பதி ஹெட்­டி­யா­ராட்சி, பருத்­தித்­து­றைப் பொலிஸ் நிலை­யப் பொறுப்­ப­தி­காரி, காங்­கே­சன்­துறை மூத்த பொலிஸ் அத்­தி­யட்­ச­கர், காங்­கே­சன் துறை உத­விப் பொலிஸ் அத்­தி­யட்­ச­கர், கடற்­ப­டைப் பொறுப்­ப­தி­கா­ரி­கள், இரா­ணு­வத்­தி­னர் மற்­றும் பருத்­தித்­துறை, மரு­தங்­கேணி பிர­தேச செய­ல­கங்­க­ளின் செய­லர்­க­ளும் கலந்து கொண்­டி­ருந்­த­னர்.

மேஜர் ஜென­ரல் சவேந்­திர சில்வா தொடர்­பில் இறு­திக்­கட்­டப் போரின் போது போர்க்­குற்­றங்­களை இழைத்­தார் என்று கடு­மை­யான குற்­றச்­சாட்­டுக்­கள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. கைய­ளிக்­கப்­பட்டு காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளின் உற­வி­னர்­க­ளால் முல்­லைத்­தீவு நீதி­வான் மன்­றில் தொடுக்­கப்­பட்ட ஆள்­கொ­ணர்வு மனு­வி­லும் மேஜர் ஜென­ரல் சவேந்­திர சில்­வா­வின் பெயர் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளது.

இலங்­கை­யின் போர்க்­குற்­றம் தொடர்­பில் ஆராய்ந்த ஐக்­கிய நாடு­க­ளின் நிபு­ணர் குழு­உ­றுப்­பி­னர் யஸ்­மின் சூக்கா, மேஜர் ஜென­ரல் சவேந்­திர சில்வா இறு­திப் போர்க் காலத்­தில் போர்க்­குற்­றம் புரிந்­தார் என்று குற்­றம் சுமத்­தி­யி­ருந்­தார்.

No comments