இராணுவத்தினை சேவையிலீடுபடுத்த மைத்திரி பணிப்பு?


வன்னியில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு உதவிகளை வழங்க இலங்கை ஜனாதிபதி இராணுவம் மற்றும் வடக்கு ஆளுநர்,மாவட்ட செயலாளர்களிற்கு பணிப்புரை விடுத்துள்ளாராம்.

இது தொடர்பில் ஜனாதிபதியின் தமிழ் ஊடகப்பிரிவு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் படையினரை பயன்படுத்துவது அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் தரப்புகளில் பலர் நகர்புறங்களில் உள்ள நலன்புரி நிலையங்களுக்குச் சென்று உதவிகழள வழங்கி வருகின்றனர்.மாவட்டத்தின் தொலைவில் உள்ள தம்பிராசபுரம், மயில்வாகனபுரம், பிரமந்தனாறு போன்ற இடங்களில் உள்ள மக்களுக்கு போதுமான உதவிகள் கிடைக்கவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஊடாக தொடர்புகளை கொண்டு உதவிகள் சென்றடைய வழி செய்யுமாறும் அதிகாரிகளினால் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

No comments