நாட்டை காக்க அமெரிக்க, பிரிட்டன் புலனாய்வு அமைப்புக்களுடன் போரிட்டோம்

சிறிலங்கா அரசியல் நெருக்கடியில், அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பு (சிஐஏ) மற்றும் பிரித்தானியாவின் எம்-16 புலனாய்வு அமைப்புகளின் தலையீடுகள் இருந்ததாக, மகிந்த ராஜபக்ச அணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குற்றம்சாட்டியுள்ளார்.

பிரித்தானியாவின் தி கார்டியன் இதழில் வெளியான செய்தி ஒன்றுக்கு பதிவிட்டுள்ள கருத்திலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

”சிஐஏ, எம்16 போன்ற வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகளுக்கு எதிராக நாங்கள் போரிட்டோம்.

இது ஒரு கடுமையான சமர் என்பது எங்களுக்குத் தெரியும்.

நாடாளுமன்றத்தில் எங்களுக்கு பெரும்பான்மை இல்லை என்று சபாநாயகர் அறிவித்தபோது, அங்கிருந்த வெளிநாட்டு இராஜதந்திரிகள் ஆரவாரம் செய்தனர்.

அவர்கள் அனைவரும் இப்போது நன்றாக உறங்க முடியும்” என்றும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

No comments