புதிய அரசியலமைப்பு சாத்தியமில்லை என்கிறார் சித்தார்த்தன்

ஐக்கியதேசிய முன்னணி தலமையிலான அரசாங்கம் மீண்டும் பதவிக்கு வரும்போது புதிய அரசியலமைப்பு சாத்தியம் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவா் இரா.சம்மந்தன் நினைக்கிறாா். ஆனால் என்னைப் பொ றுத்தளவில் அது மிகவும் கடினமான ஒரு பணி என நாடாளுமன்ற உறுப்பினா் த.சித்தாா்த்தன் கூறியுள்ளாா்.

வார இறுதி பத்திரிகை ஒன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

தனிப்பட்ட முறையில் புதிய அரசியலமைப்பு என்பது மிகவும் கடினமான பணியாகும் என்பதை நான் ஆரம்பத்திலிருந்தே கூறி வருகின்றேன்.

தென்னிலங்கை அரசியல் தரப்புக்களைப் பொறுத்தவரையில் அவர்கள் அதிகாரப்பரவலாக்கத்திற்கு எதிரான நிலைப்பாடுகளையே கொண்டிருக்கின்றார்கள்.

அவ்வாறான நிலையில் அரசியலமைப்பு பணியை முன்னெடுப்பது மிகக் கடினமாக இருக்கும்.

மிக சொற்ப காலத்தில் ஏதோவொரு தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலை அண்மித்த காலத்தில் தென்னிலங்கைத் தலைவர்கள் இத்தகைய விடயங்களில் அதிக கவனம் செலுத்துவார்கள் என்று நான் நம்பவில்லை.

ஆகவே ஆகக் கூடுதலாகக் அடுத்து அமைகின்ற அரசாங்கத்திற்கு அழுத்தங்களை அறித்து தற்போது முன்னெடுக்கப்பட்டிருக்கின்ற புதிய அரசியல் அமைப்புக்கான விடயங்களை தொடர்ச்சியாக முன்னெடுத்து வரைவொன்றை இறுதி செய்யலாம்.

அடுத்த பொதுத் தேர்தலின் பின்னர் அதனை நிறைவேற்றுவதற்கான சூழல் ஏற்பட்டால் நிறைவேற்ற முடியும் என தெரிவித்துள்ளார்.

No comments