ஐதேக அரசாங்கத்தில் இணைவதற்கு சுக எம்பிக்களுக்குத் தடை
ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் இணைந்து கொள்வதற்கு, சிறிலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, அந்தக் கட்சியின் தலைவரும், அதிபருமான மைத்திரிபால சிறிசேன தடைவிதித்துள்ளார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 21 பேரும், ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்துடன் இணைந்து கொள்ள விருப்பம் வெளியிட்டிருந்தனர்.
இது தொடர்பான பேச்சுக்களும் நடத்தப்பட்டுக் கொண்டிருந்த நிலையில், சிறிலங்கா அதிபர்,மைத்திரிபால சிறிசேன, நேற்று மாலை சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 21 பேரையும் சந்தித்துப் பேசினார்.
இந்தக் கூட்டத்திலேயே அவர், சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் 21 பேரும், எதிர்க்கட்சி வரிசையிலேயே அமர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா ஜனாதிபதியுடனான சந்திப்புக்குப் பின்னர் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர,
“சிறிலங்கா சுதந்திரக் கட்சி எதிர்க்கட்சி வரிசையிலேயே இருக்கும், ஐதேகவுடன் தேசிய அரசாங்கத்தை அமைக்கமாட்டோம்.
தனித்தனி முடிவுகளை எடுக்காமல், 21 உறுப்பினர்களையும் எதிர்க்கட்சியில் ஒரே குழுவாக இயங்குமாறு சிறிலங்கா அதிபர் கேட்டுக் கொண்டார்.
நேற்றைய கூட்டத்தில், கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திசநாயக்கவும் கலந்து கொண்டிருந்தார். அவரும் இந்த முடிவுக்கு ஆதரவு அளிப்பார் என்று எதிர்பார்ப்பதாக”, தெரிவித்தார்.
அதேவேளை அமைச்சர் பதவிகளை ஏற்றுக் கொள்ளாமல், எதிர்க்கட்சி வரிசையில் அமர முடிவு செய்திருப்பதாக, நாடாளுமன்ற உறுப்பினர் நிசாந்த முத்துஹெட்டிகம தெரிவித்துள்ளார்.
பியசேன கமகே, ஏஎச்எம்.பௌசி, மனுஷ நாணயக்கார தவிர்ந்த, சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த எவரும் ஐதேக அரசாங்கத்தில் இணையமாட்டார்கள் என்று, சந்திம வீரக்கொடியும் கூறினார்.
முன்னதாக, சுதந்திரக் கட்சியில் உள்ள எவரேனும் விரும்பினால் ஐதேக அரசாங்கத்தில் இணைந்து கொள்ளலாம் என்றும் அதற்கு தான் தடை விதிக்கப் போவதில்லை என்றும் ஜனாதிபதி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment