மீண்டும் கொழும்பில் குழப்பம்:அமைச்சரவை தாமதமாகின்றது!


எதிர்பார்த்தது போன்றே ரணில் அரசிற்கான மைத்திரியின் குடைச்சல் ஆரம்பமாகிவிட்டது.அமைச்சர்களை தானே நியமிப்பேன் என்ற மைத்திரியின் குடைச்சல் உள்ளிட்ட பல சிக்கலான விடயங்கள் தீர்க்கப்படாமலிருப்பதால் அமைச்சரவை இன்று பதவி ஏற்காதென கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே ஜனாதிபதி இன்று மாலை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் எம்.பி.களை சந்திக்கிறார். இதன்போது ரணில் அரசாங்கத்தில் சுதந்திரக்கட்சியிலிருந்து இணையவுள்ளோர் தொடர்பான இறுதி முடிவும் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் குறிப்பிட்ட தீர்மானம் எடுக்கப்படும் வரை புதிய அமைச்சரவை குறித்து இன்னும் முழுமையான முடிவு எடுக்கப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. பல அமைச்சுப் பொறுப்புகளை ஜனாதிபதி விட்டுக் கொடுப்பதாய் இல்லை. 

பிரதமர் ரணில் வாக்களித்தபடி நிதி அமைச்சு ரவி கருணநாயக்கவிற்கு வழங்கப்படுகிறது. ஆனால் இந்த விடயம் கட்சிக்குள்ளேயே அதிருப்தியை உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே நாளை நாடாளுமன்ற அமர்வு இடம்பெறும் நிலையில், சபாநாயகர் நாளை கட்சித் தலைவர்களை சந்திக்கிறார்.

No comments