யாழ் கலட்டியில் பெற்றோல் குண்டுவீச்சு - வீடு சேதம்

யாழ்ப்பாணம், கலட்டி பகுதியில் இனந்தெரியாத நபர்களினால் பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதனால் குறித்த வீடு பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் யாழ். பொலிஸாரை தொடர்பு கொண்டு கேட்ட போது, ​​நேற்று (16) இரவு சம்பவம் இடம்பெற்றதாகவும் இனந்தெரியாத நபர்களினால் குறித்த வீடு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும், அப்பகுதி மக்கள் குறித்த தாக்குதலை அவா குழுவே செய்ததாக சந்தேகிப்பதாக தெரிவித்துள்ளனர்.

யாழ். பொலிஸார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments