பளையில் தடம்புரண்ட லொறி
யாழ்ப்பாணம் பளைப்பகுதில் லொறி ஒன்று விபத்திற்குள்ளாகிய நிலையில் தடம்பிரண்டுள்ளது. இன்று பிற்பகல் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

வேகமாக பயணித்த குறித்த லொறி விபத்துக்குள்ளாக நேர்ந்த சந்தர்ப்பத்தில் குறித்த விபத்தினைத் தடுக்கும் நோக்கில் வீதியின் கரைப்பகுதிநோக்கி சடுதியாகத் திருப்பியதில் வீதியின் ஓரத்தில் நீர்க்குழாய்கள் அமைப்பதற்காக வெட்டப்பட்டிருந்த பள்ளத்துள்ள சிக்கிக்கொண்டது.

இதன்போது குறித்த லொறி தடம்புரண்டு வீழ்ந்துள்ளது. இச்சம்பவத்தில் லொறியின் சாரதி சி காயத்திற்குள்ளாகியுள்ளார்.

No comments