இரணைமடுக் குளத்தின் ஆறு வான்கதவுகள் திறக்கப்பட்டன


இரணைமடுக் குளத்திற்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளதால், அதன் ஆறு வான் கதவுகள் இன்று முற்பகல் 11 மணியளவில் திறக்கப்பட்டன.

அதனால் தாழ்வான பகுதிகளான பன்னங்கண்டி, ஊரியான் , முரசுமோட்டை, வட்டக்கச்சி பண்ணைப் பகுதி மற்றும் கண்டாவளை ஆகிய பகுதி மக்கள் அவதானமாக இருக்குமாறு நீர்ப்பாசத் திணைக்களம் கேட்டுள்ளது.

இரணைமடுக் குளத்தின் நீர்மட்டம் நேற்றுப் பிற்பகல் 35.05 அடியை எட்டியது. குளத்தின் மொத்த கொள்ளளவு 36 அடியாக உள்ளது. அதனால் இன்று சனிக்கிழமை முற்பகல் 11 மணியளவில் 6 வான் கதவுகள் திறக்கப்பட்டன.

No comments