அமெரிக்கப் போர்க்கப்பலும் கொழும்பில்

ரஷ்ய கடற்படையின் மூன்று போர்க்கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்தில் தரித்திருக்கும் நிலையில், அமெரிக்காவின் தரையிறக்கக் கப்பல் ஒன்று நேற்று கொழும்பு வந்து சேர்ந்துள்ளது.

13 ஆவது கடல் விரைவு அணியைச் சேர்ந்த யுஎஸ்எஸ் ரஷ்மோர் (USS Rushmore) என்ற தரையிறக்க கப்பலே ஆறு நாட்கள் பயணமாக கொழும்புத் துறைமுகத்துக்கு வந்துளள்து.

கொமாண்டர் றொபேர்ட் ட்ரயனை கட்டளை அதிகாரியாக கொண்ட, 185 மீற்றர் நீளமான இந்தக் கப்பலில், 380 அதிகாரிகள் மற்றும் கடற்படையினர் பணியாற்றுகின்றனர்.

எதிர்வரும் 26ஆம் நாள் வரை கொழும்பு துறைமுகத்தில் அமெரிக்க கடற்படைக் கப்பல் தரித்திருக்கும் என்றும், இதன் போது இருநாடுகளின் கடற்படையினரும் இணைந்து பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க- சிறிலங்கா கடற்படைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தப் பயணம் இடம்பெற்றுள்ளது.

No comments