கவிபாஸ்கர் எழுத்திய ''விடியலின் நெருப்பு பிரபாகரன்''

எரிமலை நெருப்பை  சுமந்தவன் – அவன்
எரிகிற நெருப்பாய் பிறந்தவன்
தமிழர் இனத்துக்கு தலைமகன் – புதிய
திசையை காட்டிய எம் தலைவன்

அவன்.. பிரபாகரன்.. அவன் பிரபாகரன்

மின்னல் இடியாய் மின்னியவன் – பெரும்
இன்னலை வெடியாய் விரட்டியவன்
முப்படை முதலில் கட்டியவன் – புலி
எப்படை வரினும் முட்டியவன்

அவன்.. பிரபாகரன்.. அவன் பிரபாகரன்

புல்லையும் போர்வாளாய் மாற்றியவன்  - தமிழ்
பிள்ளைக்கு உணர்வை ஊட்டியவன்
வில்லையும் சொல்லையும் ஏந்தியவன் – போர்
எல்லையில் வென்றிட முந்தியவன்

அவன்.. பிரபாகரன்.. அவன் பிரபாகரன்

துவக்கின் விழிகளில் சீறியவன் – ஒரு
இலக்கின் வழிகளில் பேசியவன்
கிழக்கின் சிவப்பாய் மாறியவன் – ஒளி
விளக்கில் விடியலை மாற்றியவன்

அவன்.. பிரபாகரன்.. அவன் பிரபாகரன்

தமிழர் மனதினில் ஏறியவன் – இன
உணர்வை நரம்பினில் ஏற்றியவன்
ஈழ யாழினை மீட்டியவன் – எம்
இளையோர் கூட்டத்தை மீட்கிறவன்

அவன்.. பிரபாகரன்.. அவன் பிரபாகரன்


செயலின் வடிவில் ஊறியவன் – ஒரு
புயலின் நிறமாய் மாறியவன்
உலகத் தமிழரை சேர்க்கிறவன் – ஒரு
புள்ளியில் புலிகளை இணைக்கிறவன்

அவன்.. பிரபாகரன்.. அவன் பிரபாகரன்

விடுதலை கனவைத் தீட்டியவன் – இன
கொடுமையை தடுக்கிற வீரனவன்
தலைமுறை பேசுற தலைவனவன் - எம்
தமிழ் குலம் காக்கிற சாமியவன்                           

அவன்.. பிரபாகரன்.. அவன் பிரபாகரன்

அன்றும் இன்றும் என்றும் இவனே
எங்கள் மானத் தலைவன் !
இருந்தான் இருக்கிறான் இருப்பான் இவனே
எங்கள் வீரத்தமிழன்!

No comments