நெதர்லாந்தில் நடைபெற்ற மாவீரர் நாள்

27-11-18 அன்று அல்மேரா நகரில் நினைவெழுச்சி நாள் வெகு உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. நிகழ்வுகள் ஆவன பொதுச்சுடர் ஏற்றல் அதனைத்தொடர்ந்து தமிழீழ
தேசியக்கொடி ஏற்றல் .மற்றும் ஈகைச்சுடர் ஏற்றலுடன் அனைத்து மாவீரர் உறவுகளும் தங்கள் மாவீரர் உறவுகளின் திருவுருவப்படங்களுக்கு சுடர் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தியதை தொடர்ந்து அங்கு உணர்வுபூர்வமாக வருகை தந்திருந்த நமது அனைத்து உறவுகளும் ஏனைய மாவீரர் திருவுருவப்படங்களுக்கு சுடர் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினர்.

பின் பல கலை நிகழ்வுகளும் இடம்ப்பெற்றதை தொடர்ந்து தமிழமுதம் இசைக்குழுவின் எழுச்சிக்கானங்களும் இசைக்கப்பட்டது .பின் அனைத்து நிகழ்வுகளின் முடிவில் தமிழீழத்த்சியக்கொடி கையிறக்கி வைக்கப்பட்டு நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவுபெற்றன.

No comments