முதலாவது மாவீரர் லெப்.சங்கர் எரியூட்டப்பட்ட இடத்தில் ஏற்றப்பட்டது பொதுச்சுடர்

தமிழீழ விடுதலைப் புலிகளின் முதலாவது மாவீரர் லெப். சங்கர் உடல் எரியூட்டப்பட்ட கீரைத்துரை சுடுகாட்டில் மாலை சரியாக 6.05க்கு விளக்கேற்றி மாவீரர்களுக்கு வீரவணக்கம்
செலுத்தப்பட்டுள்ளது.

புலிகளின் கட்டளைத் தளபதி சங்கர், சிங்கள ராணுவத்துடன் நடந்த சண்டையில் படுகாயமுற்று குடல் சரிந்த நிலையில், மதுரையிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கடந்த 1982-ம் ஆண்டு நவம்பர் 27-ம் நாள் மாலை மேதகு வே.பிரபாகரன் மடியில், மதுரை மண்ணில் உயிர் நீத்தார். சங்கர் வீரச்சாவடைந்த அதே நாளன்று இரவு  விடுதலைப் புலிப் போராளிகள் மதுரை வந்து இராணுவ மரியாதையோடு தளபதி சங்கரின் பூத உடல் இதே கீரைத்துரை மயானத்தில்  எரியூட்டப்பட்டது என்பது வரலாறு.

 மாவீரன் சங்கர் மரணமடைந்த அந்த நாளைத்தான் மேதகு வே.பிரபாகரன் கடந்த 1989-ம் ஆண்டு முதல் புலிகளின் மாவீரர் தினமாக அறிவித்ததுடன், தனது மடியில் சங்கர், தலை வைத்து உயிர் நீத்த அந்த மாலை 6.05 மணிக்கு தனது மாவீரர் உரையை வாசிப்பதும் மயிர்கூச்செரிய வைக்கும்  வரலாறு.

#Madurai #Shankar #lt.Shankar







No comments