ஞானசார தேரர் விடுதலை: மைத்திரி பச்சைக்கொடி!


சிறையிலடைக்கப்பட்டுள்ள ஞானசார தேரரின் விடுதலையினை துரிதப்படுத்த மைத்திரி சம்மதித்துள்ளதாக தெரியவருகின்றது.

ஞானசார தேரரின் விடுதலையினை வலியுறுத்தி இன்று ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்திய பிக்குகள் மீது தண்ணீர் மற்றும் கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. ஆனால் குறித்த தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் தனக்கு தெரியாதென பின்னர் பல்டியடித்துக்கொண்ட ஜனாதிபதி மைத்திரி தாக்குதலிற்கு கண்டனமும் தெரிவித்துள்ளார்.அத்துடன் இதற்கு உத்தரவிட்டவர் தொடர்பில் விசாரணை செய்யவும் பணித்துள்ளதாக விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

இதனிடையே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா பின்னர் அழைத்து பேசியிருந்தார்.அவருடன் சர்;ச்சைக்குரிய சிங்களயே அபி தேசிய அமைப்பு உள்ளிட்ட மேலும் சில அமைப்புக்களை பிரதிநிதித்துவம் செய்யும் தேரர்கள் குழுவினர் கலந்து கொண்டிருந்தனர்.

அவர்கள் கலபொட அத்தே ஞானசார தேரரின் நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பான கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை கையளித்ததுடன், ஜனாதிபதியுடன் சுமூகமான கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர்.

அப்போதே ஞானசார தேரரின் விடுதலையினை துரிதப்படுத்த மைத்திரி உறுதி மொழி வழங்கியிருந்ததாக தெரியவருகின்றது.

No comments