பொலிஸ்மா அதிபரிடம் 4 மணி நேரம் விசாரணை

பிரமுகர் கொலை முயற்சி தொடர்பிலான விசாரணைகளுக்காக வாக்குமூலம் வழங்குவதற்காக, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர இன்று (25) காலை, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியிருந்தார்.

பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர இன்று காலை 7.30 மணிக்கு வாக்குமூலம் வழங்குவதற்காக வருகை தந்ததாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சுமார் மூன்றரை மணித்தியாலத்திற்கும் அதிகநேரம் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதுடன், காலை 11 மணியளவில் அவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து வௌியேறியுள்ளார்.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் விடுக்கப்பட்ட அழைப்பிற்கேற்ப பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர வாக்குமூலம் வழங்குவதற்காக வந்திருந்ததாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

ஊழல் ஒழிப்புப் படையணியின் நடவடிக்கைப் பிரிவு பணிப்பாளர் நாமல் குமாரவினால் பிரபு கொலை முயற்சி தொடர்பில் அண்மையில் வௌியிடப்பட்ட தகவல்களுடன் இணைந்த வகையில் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம் குற்றப்புலனாய்வு திணைக்களம் வாக்குமூலம் பதிவுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments