மாவீரர் நினைவேந்தலிற்கு தடையில்லை!

தமிழீழ மாவீரர் நாளை அனுஷ்டிக்க யாழ்ப்பான நீதவான் தடைவிதித்துள்ளார்.ஆனால் உயிரிழந்தவர்களிற்கான நினைவேந்தலுக்கு தடையில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் கோப்பாயில் முன்னர் மாவீரர் துயிலுமில்லம் அமைந்திருந்த காணியில் தற்போது 512ஆவது படைத் தலைமையகம் உள்ளது.

இக்காணிக்கு எதிரே உள்ள தனியார் காணியில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கொடிகள் மற்றும் சின்னங்களைப் பயன்படுத்தி மாவீரர் நாள் நிகழ்வை நடத்த யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் தடை விதித்ததுள்ளது.

ஆனால் உயிரிழந்தவர்களினை நினைவுகூர தடையில்லையென அவர் அறிவித்துள்ளார்.

முன்னதாக குறித்த படைமுகாம் முன்பாகவுள்ள தனியார் காணியில் மாவீரர் தினத்தை நடத்த தடை உத்தரவை மன்று வழங்கவேண்டுமென கோப்பாய் பொலிஸார் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றல் நேற்றுமுன்தினம் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.

அந்த மனு மீதான கட்டளை இன்று மாலை யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் வழங்கினார்.

அப்போதே தமிழீழ மாவீரர் நாளை அனுஷ்டிக்க தடைவிதித்துள்ள அதேவேளை  உயிரிழந்தவர்களிற்கான நினைவேந்தலுக்கு தடையில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments