ராஜிதாவிற்கு அமைச்சு வேண்டாம்?


முன்னாள் அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான ராஐpத சேனாரத்தினவிற்கு கல்வி மற்றும் சுகாதார அமைச்சு பொறுப்புக்கள் வழங்கப்படவே கூடாது என வலியுறுத்தியிருக்கும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அவ்வாறு இந்த இரு அமைச்சில் ஏதாவது ஒன்று அவருக்கு வழங்கப்பட்டால் அதற்கு எதிராக போராட்டங்களை முன்னெடுக்கப் போவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

யாழ் ஊடக அமையத்தில் இன்று மதியம் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது மேலும் அவர்கள் கருத்து வெளியிடுகையில் சுகாதார அமைச்சராக முன்னர் இருந்த ராஐpத சேனாரத்னவின் தான்தோன்றித்தனமான செயற்பாடுகள் தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கள் ஏற்கனவே ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் முறையிட்டுள்ளது. அதே நேரம் அவரின் செயற்பாடுகளைக் கண்டித்து போராட்டங்களையும் நடத்தியிருக்கின்றது.

இந்நிலையில் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தின் போதும் அவருக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படலாம் எனத் தெரிய வருகின்றது. ஆனால் ராஐpத சேனாரத்தினவிற்கு மீண்டும் சுகாதார அமைச்சோ அல்லது கல்வி அமைச்சோ வழங்கப்படக் கூடாதென்பதே எங்களது கோரிக்கையாக இருக்கின்றது.

ஏனெனில் இந்த இரு அமைச்சு பொறுப்புக்களையும் அவர் சரியான முறையில் கொண்டு செல்லக் கூடியவரல்ல. அவருக்கு இந்தப் பொறுப்புக்கள் வழங்கப்பட்டால் அத்துறைகள் ஒருபோதும் முன்னோக்கிச் செல்லப் போவதில்லை. அத்தோடு இங்குள்ள மக்கள் தான் அதனால் பெரிதும் பாதிக்கப்படக் கூடிய துர்ப்பாக்கியமான நிலைமை ஏற்படலாம். 

ஆகையினால் சுகாதார மற்றும் கல்வி அமைச்சுப் பொறுப்புக்களை அவருக்கு இந்த அரசின் காலத்திலும் வழங்கப்படக் கூடாதென நாங்கள் கோருகின்றோம். இருந்தும் அரசாங்கம் மீளவும் அந்தப் பொறுப்புக்களை அவருக்கு வழங்குமிடத்தே வேலை நிறுத்த பணிப்புறக்கணிப்பிற்கு மருத்துவ அதிகாரிகள் சங்கம் செல்லும். சுகாதர மற்றும் கல்வி துறையின் முன்னேற்றத்திற்கும் நோயாளரின் நலனைக் கருத்திற் கொண்டே இத்தகைய முடிவுகளை எடுத்திருக்கின்றோம். 

இலங்கை முழுவதும் இதே கோரிக்கையை முன்வைத்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் போராட்டங்களை மேற்கொள்வதற்கு தீர்மானித்துள்ளது. ஏனெனில் சுகாதார துறையைப் பாதுகாக்கின்ற பொறுப்பும் கடமையும் வைத்தியர்களுக்கு இருக்கின்றது. அதற்கமைய எமது செயற்பாடுகளை நாம் மேற்கொள்ளத் தயாராக உள்ளோம். ஆகவே அவர் எந்த அரசிலும் அமைச்சுப் பொறுப்பை ஏற்கலாம் ஆனால் சுகாதார மற்றும் கல்வித் துறை சார்ந்த அமைச்சுப் பொறுப்புக்களை வழங்கக் கூடாது. அவ்வாறு வழங்கினால் நாம் தொடர் போராட்டங்களை முன்னெடுப்போம் என்றனர்.

No comments