பதவி விலகினார் எரிக் சோல்கைம்

ஐக்கிய நாடுகள் சபையின் நெறிமுறைகளுக்கு மாறாக பயணத்திட்டங்களுக்கு அதிக செலவு செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள ஐநா சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் எரிச் சோல்கைம் பதவி விலகியுள்ளார்.

கென்யாவின் நைரோபி நகரை தலைமையிடமாக கொண்டு, ஐ.நா. சுற்றுச்சூழல் அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்பின் தலைவராக பதவி வகித்து வந்த எரிக் சோல்கைம் இருந்து வந்துள்ளார்.

தனது அதிகாரப்பூர்வ பயணங்களுக்காக 5 லட்சம் அமெரிக்க டாலர்கள்  செலவிட்டமை கண்டறியப்பட்டது. மேலும், தனது பயணங்களுக்கான செலவுத் தொகையை பெறுவதில், அவர் நெறிமுறைகளுக்கு மாறாக செயல்பட்டதாக தணிக்கை அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டது.

ஐ.நா. சுற்றுச்சூழல் அமைப்பு, நிதி பற்றாக்குறையில் தவிக்கும் நிலையில், எரிக்கின் செயல்பாடுகள் சர்ச்சையை ஏற்படுத்தின. மேலும், சுற்றுச்சூழல் நடவடிக்கைகளில் அவர் போதிய கவனம் செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அவர் பதவி விலகியுள்ளார்.

பாரீஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தை அமல்படுத்துவது தொடர்பான முக்கிய பேச்சுவார்த்தைகள், போலந்தில் அடுத்த மாதம் 2ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், ஐ.நா. சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் பதவி விலகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

#Erik Solheim #UNEP chief Erik Solheim #UNEP

No comments