சிறிலங்காவின் நாணயப் பெறுமதி தொடர்ந்து வீழ்ச்சி


அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு நாளுக்கு நாள் வீழ்ச்சி கண்டு வருகிறது. இன்று சிறிலங்கா மத்திய வங்கி வெளியிட்ட நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில், அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி, 177.32 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்சி மாற்றத்துக்குப் பின்னரும், சிறிலங்கா நாணயத்தின் மதிப்பு வீழ்ச்சியடைவது தொடர்ந்து கொண்டிருக்கிறது.

நேற்றுமுன்தினம், 174.75 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலர் ஒன்றின் மதிப்பு, நேற்று, 176.25 ரூபாவாக வீழ்ச்சி கண்டது, இன்று 177.32 ரூபாவாக வீழ்ச்சியடைந்துள்ளது.

No comments