விக்னேஸ்வரனின் அரசியல் குறித்த சந்திப்பு ஆரம்பம்! அதிகளவான மக்கள் பங்கேற்பு!

வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனின் புதிய அரசியல் பாதையை அறிவிக்கும் தமிழ் மக்கள் பேரவையின் கூட்டம் நல்லூரில் ஆரம்பமாகியுள்ளது.

பெரும் கரகோசத்துடன் மக்கள் நிறைந்து வழியும் மண்டபத்தினுள் புகுந்த முதலமைச்சர் மேடையில் அமர்ந்திக்கிறார். தற்போது மத தலைவர்களின் ஆசி செய்திகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

சின்ம மிசன் சுவாமி அவர்கள் தமது ஆசி செய்தியில் தமிழ் மக்கள் விக்கினேஸ்வரனின் தலைமையை எதிர்பார்த்து காத்திருப்பதாக தெரிவித்தார்.

இதேநேரம் முதலமைச்சர் தனது அரசியில் கட்சியின் பெரையும் அறிவிக்கவுள்ளார்.

தமிழ் மக்கள் பேரவையின் மிக முக்கியமா ன கூட்டம் வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய சுற்றாடலில் உள்ள நட ராஜா பரமேஸ்வரி மண்டபத்தில் ஆரம்பமாகியுள்ளது.

வடமாகாணசபையின் ஆட்சி இன்றுடன் நி றைவடையும் நிலையில் வடமாகாண முத லமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனின் அடுத்த கட்ட அரசியல் பிரவேசம் தொடர்பாக எதிர் பார்ப்புக்கள் வலுத்துள்ளது.

இந்நிலையில் இன்றைய தினம் நடைபெ றும் தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தி ல் முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் தன து அரசியல் பயணம் குறித்து அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படும் நிலையில்,

தமிழ் மக்கள் பேரவையின் கூட்டம் முக்கிய த்துவம் பெற்றுள்ளது. இந்த கூட்டம் இன்று காலை 10 மணிக்கு முதலமைச்சர் சீ.வி.வி க்னேஷ்வரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நிகழ்வு ஆரம்பமாகியுள்ளது.

இன்றைய நிகழ்வில் மத தலைவர்களது ஆசி உரைகளை தொடர்ந்து யாழ்.பல்கலைக்கழக சட்ட துறை விரிவுரையாளர் கு.குருபரன், தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர் களுள் ஒருவரான வசந்த குமார் (கிழக்கு மாகாணம்) மற்றும் .வைத்திய கலாநிதி லக்ஸ்மன் ஆகியோரின் உரையை தொடர்ந்தே முதலமைச்சர் உரை நிகழவுள்ளது.

No comments