தோசை போடத் தெரியாதவர்கள் தான் எமது பிரதிநிதிகள் - முதலமைச்சர்

அர­சி­ய­லில் தோசையை எப்­போது திருப்ப வேண்­டும் என்று தெரிந்து வைத்­தி­ருக்க வேண்­டும் என அம­ரர் சௌம்­மி­ய­மூர்த்தி தொண்­ட­மான் கூறு­வார். தோசையே போடத் தெரி­யா­த­வர்­கள் தான் எமது பிரதிநிதிகளாக இருக்­கின்­றார்­கள்.

இவ்­வாறு  வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் தெரிவித்­தார்.

தமிழ்த் தேசி­யப் பசுமை இயக்­கத்­தின் ஏற்­பாட்­டில் முன்­னெ­டுக்­கப்­ப­டும், சூழல் அர­சி­ய­லும் நில அப­க­ரிப்­பும் போரின் பச்சை முகம் என்ற தொனிப் பொரு­ளி­லான உரை அரங்கு, யாழ்ப்­பா­ணம் இந்­துக் கல்­லூரி சபா­லிங்­கம் அரங்­கில் நேற்று மாலை இடம்­பெற்­றது. இங்கு முதன்மை விருந்­தி­னர் உரை நிகழ்த்­து­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.
அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

நில அப­க­ரிப்­புக்­கான பல சட்­டங்­கள் இயற்­றப்­பட்­டுள்­ளன. புதிய புதிய சட்­டங்­களை உரு­வாக்கி அந்­தச் சட்­டங்­க­ளின் கீழ் எமது மக்­க­ளின் பூர்­வீக குடி­யி­ருப்­புக் காணி­கள் அர­சு­ட­மை­க­ளாக்­கப்­பட்டு வரு­கின்­றன. எமது மக்­களை அவர்­க­ளின் இருப்­பி­டங்­க­ளில் இருந்து அகற்­று­வ­தும் அவர்­கள் நிலங்­க­ளில் பயிற்­செய்­கை­கள் மேற்­கொள்ள முடி­யா­மல் தடுப்ப­தும் என்று பல­வித வழி­க­ளில் இந்­தப் பச்­சைப் போர் முன்னெடுக்கப்­பட்டு வரு­கின்­றது.

இவை பற்றி எது­வும் அலட்­டிக் கொள்­ளா­மல் எமது அர­சி­யல் தலைமைகள் தொடர்ந்­தும் ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு நிபந்­த­னை­யற்ற ஆதரவு­களை நல்­கு­வ­தும் தமிழ் மக்­க­ளின் ஏகோ­பித்த குரல்­க­ளுக்கு எதி­ராக அர­சுக்கு வக்­கா­ளத்து வாங்­கு­வ­து­மான நிகழ்­வு­கள் எம்மை வெட்­கித்­த­லை­கு­னிய வைக்­கின்­றது. ஒரு இனத்­தையே இல்­லா­மல் அழிப்­ப­தும் அவர்­க­ளின் இருப்­பி­டங்­களை இல்­லா­மல் செய்­வ­துக்­கு­மான செயல்­க­ளுக்கு எம்­மு­டைய தலை­மை­கள் துணை போகின்­றார்­கள்.

வட­கி­ழக்கு சிறப்பு அரச தலை­வர் செய­ல­ணி­யின் கூட்­டத்­துக்­குப் போகாது வருட முடி­வின் முன் அர­சி­யல் தீர்­வைத் தாருங்­கள் என்று நெருக்­கடி கொடுக்க இதுவே தரு­ணம் என்­றேன். இரா.சம்­பந்­தன், நாடாளு­மன்­றக் கூட்­டத்­தைக் கூட்டி இந்­தச் செய­ல­ணிக் கூட்­டத்­துக்கு நாம் சென்­றே­யாக வேண்­டும், அர­சி­யல் தீர்­வும் பொரு­ளா­தார முன்னேற்றமும் சமாந்­த­ர­மாக நடை­பெற வேண்­டும் என்று கூறி எம்­ம­வர் அடுத்த கூட்­டத்­துக்­குப் போனார்­கள்.

நெருக்­கு­தல்­க­ளைக் கொடுக்­காது தொடர்ந்து வரும் அர­சு­க­ளி­ட­மி­ருந்து அர­சி­யல் தீர்வை எவ்­வாறு பெறப் போகின்­றோம் என்ற அடிப்­படை அறிவு­கூட இல்­லாத தமிழ்த் தலை­மை­க­ளைத் தான் நாம் இன்று கொண்டுள்­ளோம். கடை­சி­யில் தீர்வு எது­வும் கிட்­டாது. பொரு­ளா­தார அபி­வி­ருத்தி என்ற பெய­ரில் சிங்­கள முத­லீட்­டா­ளர்­களை வடக்­குக்கு கொண்டு வரு­வ­தா­கவே இது முடி­யும்.

No comments