Header Shelvazug

http://shelvazug.com/

மாவை சொன்னது பொய்! மாணவன் ஆவேசம்!

நாங்கள் நடைபயணமாக வந்துகொண்டிருந்த போது, தமிழரசுக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா அவர்கள் கண்டு கதைத்தவர்.

நான் சிறைச்சாலையில் கைதிகளைச் சந்திப்பதற்கான அனுமதியை எடுத்து வைத்துள்ளேன். நீங்கள் போய் அங்கு சொல்லுங்கள் நான் சொன்னதாகக் கூறினால் விடுவாங்கள் என்று. நாங்கள் சிறைச்சாலைக்கு வந்தவுடன் போய் கேட்டோம். ஆனால் சிறைச்சாலை நிர்வாகத்தினர் என்ன சொன்னார்கள் என்றால் இப்படி எந்தவொரு எம்பிமாரும் கதைக்கவில்லை. நாங்கள் மனிதாபிமான அடிப்படையில் 10 பேரை கைதிகளுடன் சந்திக்க விடுகிறோம் என்றார்கள்.

நாங்கள் இவ்வளவு தூரம் கால்நடையாக 35, 40 மாணவர்களின் படிப்புகளை அப்படியே விட்டுவிட்டு வந்துள்ளோம். ஆனால் இங்கே 10 பேரைத்தான் விடுறாங்கள். இப்ப நாங்கள் அனைவரும் வெளியில் நிற்கிறோம். இதற்கு தமிழ் அரசியல் வாதிகள் தான் பதில் சொல்லவேண்டும் என்றால் அந்த மாணவன்.