வடமாகாணசபையின் இறுதி செயற்பாட்டு அமர்வு இன்று!

வடக்கு மாகாண சபை­யின் 133ஆவது அமர்வு, கைத­டி­யி­லுள்ள பேர­வைச் செய­ல­கத்­தில் இன்று நடை­பெ­ற­வுள்­ளது. வடக்கு மாகாண சபை­யின் இறுதி அமர்வு நிர்வாக ரீதியாக செயற்படக்கூடிய இறுதி அமர்வாக இன்று நடை­பெ­ற­வுள்­ளது. தீர்­மான வரை­வு­கள், கேள்­வி­கள், குறை­நி­ரப்பு பாதீடு என்­பன இன்­றைய அமர்­வில் எடுத்­துக் கொள்­ளப்­ப­ட­வுள்­ளது. எதிர்­வ­ரும் 23ஆம் திகதி இடம்­பெ­றும் அமர்வு சம்­பி­ர­தா­ய­பூர்வ அமர்வாகவே நடை­பெ­ற­வுள்­ளது.

இன்­றைய அமர்­வி­லேயே, தீர்­மான வரை­வு­கள், வாய்­மூல வினாக்­கள் என்பன எடுத்­துக் கொள்­ளப்­ப­ட­வுள்­ளன. மேலும் குறை­நி­ரப்பு பாதீ­டும் இன்­றைய அமர்­வில் சமர்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது.

வடக்கு மாகாண சபைக்­கான தேர்­தல் 2013ஆம் ஆண்டு செப்­ரெம்­பர் மாதம் 21ஆம் திகதி நடை­பெற்­றது. மாகா­ண­ச­பை­யின் முத­லா­வது அமர்வு அதே ஆண்டு ஒக்­ரோ­பர் மாதம் 25ஆம் திகதி இடம்­பெற்­றது. எதிர்­வ­ரும் 25ஆம் திக­தி­யு­டன் மாகா­ண­ச­பை­யின் பத­விக் காலம் நிறை­வுக்கு வருகின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

No comments