மைத்திரியின் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கும் பொலிஸ்மா அதிபர்


ஜனாதிபதியின் விமர்சனங்களை அடுத்து, தற்போதைய நிலைமைகள் தொடர்பாக விளக்கமளிக்கும் சிறப்பு செய்தியாளர் சந்திப்பு ஒன்றை, சட்டம், ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவும், சிறிலங்கா பொலிஸ் மா அதிபரும் இன்று நடத்தவுள்ளனர்.

அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி, சிறிலங்கா பொலிஸ் மா அதிபரைக் கடுமையாக விமர்சித்திருந்தார். பொலிஸார் குற்றங்களைக் கட்டுப்படுத்த தவறி விட்டதாகவும் சாடியிருந்தார்.

இந்த நிலையில், தற்போதைய நிலைமைகள் குறித்து விளக்கமளிக்க,  சட்டம் , ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார செய்தியாளர் சந்திப்பு ஒன்றை இன்று நடத்தவுள்ளார்.  இதில் பொலிஸ் மா அதிபரும் பங்கேற்று விளக்கமளிக்கவுள்ளார்.

சிறிலங்கா ஜனாதிபதி, முன்னாள் ஜனாதிபதி உள்ளிட்டவர்களைப் படுகொலை செய்யத் திட்டமிட்டுள்ளார் என, பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா மீது, நாமல் குமார கடந்த 13ஆம் நாள் குற்றச்சாட்டை முன்வைத்த பின்னர் நடத்தப்படும் முதலாவது செய்தியாளர் சந்திப்பு இதுவாகும்.

No comments