மட்டக்களப்பில் சிற்றூர்தி விபத்து! 7 பேர் காயம்!

மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதி பெரியகல்லாறு பிரதேசத்தில் சிற்றூர்தி ஒன்று விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணித்த 7 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் பொியகல்லாறுப் பிரதேசத்தில் பயணித்த சிற்றூர்தி வீதியை விட்டு விலகி மரத்துடன் மோதியதில் குறித்த விபத்தது இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த 7 பேரும் கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிற்றூர்தி வேகக்கட்டுப்பாட்டை மீறிச் சென்றதால் தான் குறித்த விபத்து இடம்பெற்றது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

No comments