உத்தியோகபூர்வமாக பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டார் மகிந்த ராஜபக்ச!

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 22ஆவது பிரதமராக மகிந்த ராஜபக்ச இன்று (திங்கட்கிழமை) பொறுப்பேற்றுக்கொண்டார். பிரதமர் செயலகத்தில் சற்றுமுன் அவர் தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.

ரதமர் அலுவலகத்தில் வைத்து இன்று முற்பகல் 11.50 மணியளவிலேயே தனது கடமைகளை பொறுப் பேற்றுக் கொண்டார்.

சர்வமத தலைவர்களின் ஆசிர்வாதங்களைப் பெற்றுக்கொண்டு தனது கடமைகளை மஹிந்த ராஜபக்ஸ ஆரம்பித்தார்.

இந் நிகழ்வில் மாநாயக்க தேரர்கள், மதத் தலைவர்கள்  ஊடகவியலாளர்கள், கட்சித் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், கூட்டு எதிரணியில் உள்ளவர்கள் மற்றும் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

இரண்டாவது தடைவையாகவும் நாட்டின் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments