பதவியை காப்பாற்றவே மஹிந்தவை சந்தித்தார் சம்பந்தன்!கொழும்பில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களின் மத்தியில் வல்லரசுகளின் நலன்களிற்காக கூட்டமைப்பு தொடர்ந்தும் செயற்படுகின்றதென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றஞ்சுமத்தியுள்ளார்.

தற்போதைய தெற்கு அரசியல் சூழலில் முதலமைச்சர் உள்ளிட்ட தரப்புக்கள் ஒன்றினைந்து பேரம் பேசும் சக்தியாக உருவாக வேண்டிய தேவையேற்பட்டுள் ளது.கொள்கையின் அடிப்படையில் இத்தகைய தரப்புக்கள் இணைந்து செயற்படவேண்டுமென முன்னணி விரும்புகின்றது.

கூட்டமைப்பு தலைவர் கடந்த 27ம் திகதி சொல்லியிருந்தது போன்று முகம் களை பார்த்து அல்லாது அரசியல் தீர்வு மற்றும் ஜெனீவா தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டுமென்ற அடிப்படையில் யாருக்கு ஆதரவளிப்பதென கூட்டமைப்பு தீர்மானிக்கப்போகின்றதாவென்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆனால் கூட்டமைப்பு சொல்கின்ற ஜெனீவா தீர்மானம் உள்ளக விசாரணையினையே கோரியிருந்தது.அதனை ஒட்டுமொத்த தமிழ் மக்களும் நிராகரித்துள்ள நிலையில் அதற்கு புத்துயிர் ஊட்ட முற்பட்டிருக்கின்றனர்.

எதிர்கட்சி தலைவர் மஹிந்தவை பிரதமராகவே சந்தித்துள்ளார்.தனது எதிர்கட்சி தலைவர் பதவியை தக்க வைத்துக்கொள்ளவும் மற்றும் பிரதி குழுக்களது தலைவர் பதவியை காப்பாற்றிக்கொள்ளவுமே இச்சந்திப்பு நடந்தது.

ஆனால் கூட்டமைப்பின் வல்லரசு எஜமானர்களது சீற்றத்தையடுத்தே அவரச அவசரமாக மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இலங்கையின் எதிர்கட்சி தலைவர் சாதாரண உறுப்பினரான மஹிந்தவை சந்திப்பதென்பது நாடாளுமன்ற பதவிநிலையினை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

உண்மையில் தமது சுய நலன்களிற்காகவே இந்த சந்திப்பில் இரா.சம்பந்தன் பங்கெடுத்துள்ளர்

ஆனால் மஹிந்த முதல் மைத்திரி, ரணில் தரப்புக்கள் எம்மை ஏமாற்றுவதாக தெரிவித்த கூட்டமைப்பு இப்போது அதே தரப்புக்களிடம் உறுதி மொழி கேட்பது என்பது எங்கள் மக்களை ஏமாற்றும் வழியேயாகும்.

தற்போதைய தெற்கு அரசியல் குழப்பங்கள் மத்தியிலும் கூட்டமைப்பு இப்போதும் மக்களை ஏமாற்றுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments