சிறிலங்கா கடற்படையின் அழைப்பு 35 நாடுகள் நிராகரிப்பு


கொழும்பில் சிறிலங்கா கடற்படை நடத்தும், காலி கலந்துரையாடலில் இம்முறை அதிகளவு நாடுகள் ஆர்வம் காட்டவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பில் நேற்று ஆரம்பமாகிய, ‘காலி கலந்துரையாடல்-2018’ கடல்சார் பாதுகாப்பு மாநாடு இன்று இரண்டாவது நாளாக தொடரவுள்ளது.

இந்த மாநாட்டில், அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா, சீனா உள்ளிட்ட முக்கியமான நாடுகளின் கடற்படை அதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.

இந்த மாநாட்டில் பங்கேற்குமாறு சிறிலங்கா அரசாங்கத்தினால், 73 நாடுகளுக்கு அழைப்புகள் விடுக்கப்பட்டிருந்தன.

எனினும், 38 நாடுகள் மாத்திரமே தமது பிரதிநிதிகளை அனுப்பியுள்ளன. 35 நாடுகள் இந்த அழைப்பை ஏற்கவில்லை.

சிறிலங்காவின் அழைப்பை நிராகரித்த நாடுகளில், தென்னாபிரிக்கா, சிங்கப்பூர், சுவிட்சர்லாந்து, நோர்வே, பெல்ஜியம், டென்மார்க், ஈரான், தென்கொரியா, மொறிசியஸ் போன்ற நாடுகளும் அடங்கியுள்ளன.

No comments