ரணிலுடன் மூடிய அறைக்குள் தனித்துப் பேசிய மோடி


இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன், மூடிய அறைக்குள் தனியாகப் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

புதுடெல்லியில் உள்ள ஹைதராபாத் ஹவுசில், நேற்று பிற்பகல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சிறிலங்கா பிரதமர் சந்தித்தார்.

சிறிலங்கா பிரதமருடன், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளும் இந்தச் சந்திப்புக்காக சென்றிருந்தனர்.

இரண்டு நாடுகளின் பிரதமர்களும், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் இணைந்து இருதரப்புப் பேச்சுக்களை நடத்தினர்.

அதற்குப் பின்னர், இந்தியப் பிரதமர் மோடி, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் மூடிய அறைக்குள் தனியாக பேச்சு நடத்தினர்.

இதன்போது மிக முக்கிய விவகாரங்கள் குறித்துப் பேசப்பட்டிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் எந்த விபரங்களும் வெளியிடப்படவில்லை.

நேற்றைய சந்திப்பின் பின்னர் இரண்டு நாடுகளின் தலைவர்களும், ஊடகவியலாளர்களுக்கு எந்தக் கருத்துக்களையும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments