கவலையில் அமெரிக்க இராஜாங்க செயலகம்


இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் பதற்ற நிலைமை தொடர்பில் தாம் மிகுந்த அவதானத்துடன் இருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
அமெரிக்க இராஜாங்க செயலகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பில் இதனைக் கூறியுள்ளது.
வன்முறைகளிலிருந்தும் நாட்டைக் குழப்பும் நடவடிக்கைகளிலிருந்தும் விலகியிருக்குமாறு தான் சகல தரப்பினரையும் வேண்டிக் கொள்வதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அரசியலமைப்புக்கு ஏற்ப சபாநாயகருடன் பேச்சுவார்த்தை நடாத்தி பாராளுமன்றத்தை கூட்டுமாறும், மக்களினால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் விருப்புக்கு அமைய தெரிவு செய்யப்படும் ஒருவரை பிரதமராக செயற்பட வசதி செய்து கொடுக்குமாறும் அமெரிக்கா இலங்கை அரசாங்கத்தை வேண்டிக் கொண்டுள்ளது

No comments